ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் , ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது.
கோவையில் நடிகை கங்கனா ரனாவத் நிருபர்களிடம் கூறியதாவது:
தலைவி படத்திற்காக தமிழ் மொழி கற்று வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன்.
16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று நிறைய எனக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.