உறவும் இல்லை வரவும் இல்லை இருபதே நாட்களில் வாழ்க்கையை முடித்த காதல் தம்பதி

0
1175

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அந்தோணி லுார்துசாமி; எல்லீஸ்நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரதுகடையில் சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த செந்தில், 25, என்பவர் வேலை செய்தார்.
அப்போது, அந்தோணி லுார்துசாமி மகள் ஜெனிபர், 26, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரின்எதிர்ப்பை மீறி, 20 நாட்களுக்கு முன் திருமணம்செய்து சம்மட்டிபுரத்தில் வசித்தனர்.
ஊரடங்கால் செந்திலுக்கு வேலை கிடைக்காததால், குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இருவீட்டாரின் ஆதரவு இல்லாததால், மே 19ல் இருவரும் விஷம் குடித்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெனிபர் இறந்தார்.
இது குறித்து மதுரை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here