மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

0
484

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசிதர்மம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (45) தவறான எண்ணத்துடன் நடக்க முயன்றுள்ளார். இதனைக் கேட்ட அப்பெண்ணின் தாயிடம் இதை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண்ணின் தாய் அச்சன்புதூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மீது வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here