புனேயில் இருந்து 6 லட்சம் தடுப்பூசி சென்னை வந்தது

0
515

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் அதிகமான பாதிப்பதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 50 பார்ச்லர்களில் 6 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருந்து அனைத்து மாவட்டத்திற்க்குக்கும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here