கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி துடியலூர் சாலை சந்திப்பு அருகே ஐஸ்வர்யா லேடீஸ் ஹாஸ்டல் உள்ளது. இந்த விடுதியை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்சா என்பவர் நடத்தி வருகிறார் .இந்நிலையில் பெண்கள் விடுதியில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலையடுத்து சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .சோதனையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரது மகன் புத்தேஷ்வர் (28) கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ஸ்டீபன் ராஜ் ( 28 )ராமேஸ்வரத்தை சேர்ந்த ஸ்டீவன் ராஜ் என்பவரது மகன் கௌதம் (22) ஆகியோர் பெண்கள் விடுதியில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கவிதா (24 ) டெல்லியைச் சேர்ந்த பரிதா பேகம் ( 26 ) மற்றும் சோனாலி ராஜ் (23) ஆகிய மூன்று பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.











