தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின் வயர்களில் தென்னை ஓலைகள் உரசுகின்றன என்ற சின்னச்சின்ன காரணங்களை மணிக்கணக்கில் நடக்கும் மின் தடைக்கு சமாதானமாக கூறுவதாக தமாக வட்டார தலைவர் முரசொலி மாறன் தெரிவித்தார்.
பல முறை முறையிட்டும் பலனில்லை. இங்குள்ள பழமையான மின்மாற்றியை பழுதுபார்த்து, மின் வயர் தடத்தை சரி செய்தாலே நிலைமை சரியாகும் என்றார் அவர்.









