10,12ஆம் வகுப்புகளில் தோல்வியுற்றவர்கள் பழைய பாடத்திட்டத்தில் எழுதலாம்

0
748

கடந்த கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மார்ச் 2020, மற்றும் ஜூன் 2020 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12-ம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11-ம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here