ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது.
.கடந்த மாதம் ஏற்பட்ட கனமழையால் விளம்பரப் பலகையை தாங்கிய இரு இரும்புத்தூண்களும் சரிந்து காணப்படுகிறது. எந்நேரமும் அவ்வழியாகச் செல்லும் வாகனத்தின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது.
.இந்த சாலை வழியாக சைக்கிளில் பள்ளிக் கூடம் செல்லும் மாணவ,மாணவிகள்,.வேலைக்குச் செல்லும் பொது மக்கள், வியாபாரிகள். என்ன தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர்

ஆகவே எந்த வாகனத்தின் மீதாவது சரிந்து விழுந்து வாகன ஓட்டிகளுக்கு உயிர் அபாயத்தை ஏற்படுத்தாதவாறு பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









