இந்திய தொழிலதிபர்கள் தங்கள் கருப்பு பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்திருந்தனர். இதுகுறித்த விழிப்புணர்வு கடந்த 2000த்திலிருந்து ஏற்பட்டாலும், கணக்கு பற்றிய விவரத்தை பெறுவதில் சட்ட சிக்கல் இருந்தது.
இந்நிலையில், 2917 டிசம்பர் 21ல் இந்தியாவும் ஸ்விட்சர்லாந்தும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அந்நாட்டின் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருந்த கணக்கை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.
அதன்படி முதல் பட்டியல் இன்று மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது பட்டியல் அடுத்த ஆண்டு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














