தூத்துக்குடியில் ஊரடங்கு வசூல் 2.12 லட்சமாக அதிகரிப்பு

0
1184

ஊரடங்கு காலத்தில் தேவையற்ற அலைச்சல் பேர்வழிகளுக்கும், முககவசம் அணியாத அசட்டைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. வசூலுக்கு பயந்து அலைச்சல் குறையும் என்றால் கூடிக்கொண்டே செல்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (14ஆம்தேதி ) ஒரே நாளில் முக கவசம் அணியாத 966 பேர் மீது நடவடிக்கை எடுத்து அபராதமாக ரூபாய் 1,93,200 விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 38 பேருக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 19,000 ஐயும் சேர்த்து ரூபாய் 2,12,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 270 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 95 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 73 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 148 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 20 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 178 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 113 பேர் மீதும் ,சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 69 பேர் மீதும் என மொத்தம் 966 பேர் மீது முக கவசம் அணியாததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 9 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 9 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 6 பேர் மீதுமாக மொத்தம் 38 பேர் மீது சமூக இடைவெளி கடைப்பிடிக்காததற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 19,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here