எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் – ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மோதல் – பரபரப்பு

0
1339

நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மு க ஸ்டாலினின் ‘ மக்களைத் தேடி முதல்வர் ‘, பாணியில், ‘ மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்’ என்ற நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று நாங்குநேரி அருகே உள்ள காடுவெட்டி, சிங்கி குளம் ஆகிய பகுதிகளில் எம் எல் ஏ வின் மக்கள் சந்திப்பும், நலத்திட்ட உதவிகளும் நடந்தன.

அங்கு மருத்துவ முகாமை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ ரூபி மனோகரனை, திசையன்விளை அருகே, மர்மமாக இறந்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயக்குமாரின் ஆதரவாளரும், வட்டார காங்கிரஸ் தலைவருமான அருணா வழிமறித்து,’ வட்டாரப் பொறுப்பாளரான என்னிடம் சொல்லாமல் எப்படி வரலாம்?’ என்று கேட்டதோடு,’ ஜெயக்குமாரையே கொன்று விட்டீர்களே!’ என்று பேசியும் தகராறு செய்தார்.

இதனால் எம்எல்ஏ உடன் அவரது ஆதரவாளர்கள் அருணா குழுவினருடன் கைகலப்பில் ஈடுபட, அந்த இடமே ரணகளம் ஆனது. இதையடுத்து எம்எல்ஏ மற்றும் உடன் வந்தவர்கள் அந்த இடத்தை காலி செய்து வெளியேறினர்

அதன் பின்பு மருத்துவ முகாமுக்கு வந்திருந்த பெண்களிடம்,’ நம்ம ஊருக்கு வந்த ஆஸ்பத்திரியை வள்ளியூருக்கு மாற்றியவர். அவர் கூப்பிட்டு நீங்கள் வருவதா?’ என்று வட்டார காங்கிரஸ் தலைவர் அருணா கடிந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here