திமுக, பாமகவை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களும் ஊதியம் வழங்க முடிவு

0
1110

கொரோனாவின் இரண்டாம் அலை சுற்றிச் சுழன்றடிக்கும் இக்காலகட்டத்தில் சிறப்பான திட்டமும், சீரிய ஒருங்கிணைப்பும் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.

நிதியை பொறுத்தவரை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை ஓரளவு வழங்கப்பட்டு வருகிறது. நடிகர், நடிகையர், தொழில் நிறுவனத்தினர் ஒருவர் பின் ஒருவராக முன்வந்து உதவுகின்றனர்.

அரசியல் கட்சியை பொறுத்தவரை திமுக ஒரு கோடி நிதி வழங்கியது. பாமக தனது எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க முன்வந்தது.

தற்போது திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து அதிமுக கட்சி சார்பில் முடியாவிட்டாலும், எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கவேண்டும் என்று முன்னணி தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.

விரைவில் அதற்கான அறிக்கை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here