தியேட்டர்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட சல்மான்கான்

0
539

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருக்கும் படம் ராதே. முடிந்தளவு ரம்ஜானில் தனது படம் வெளியாகும்படி பார்த்துக் கொள்ளும் சல்மான்கான், அவ்வாறே மே 13-ம் தேதி படத்தை வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்தார்.

ஒரே நேரத்தில் தியேட்டரிலும் ஓடிபி தளத்திலும் படத்தை வெளியிட உத்தேசித்திருந்தனர். ஆனால், கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து பல மாநிலங்கள் முழுநேர மற்றும் இரவுநேர ஊரடங்கு அறிவித்துள்ளதால் ராதே திட்டமிட்டபடி மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகாத சூழல் உள்ளது. ஒரேயடியாக ஓடிபியில் மட்டுமே படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மே 13-ம் தேதி அன்று ஸீ பிளக்ஸ் மற்றும் ஸீ 5 ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாகிறது. இச்சூழலில் தியேட்டர் உரிமையாளர்களிடம் சல்மான்கான் மன்னிப்பு கோரியிருக்கிறார். மேலும், இக்கட்டான காலகட்டத்தில் பாதுகாப்பாக படத்தை கண்டுகளிக்குமாறு ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here