திரும்மங்கலத்தில் அதிமுக ஆட்சியை ஒரு பிடி பிடித்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அஅமைச்சர் மூர்த்தி, அதிமுகவினர் குறை கூறாமல், ஆலோசனை கூற முன்வரவேண்டும்’ என்று பேட்டியளித்தார். அங்குள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ மனையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘
அதிமுகவினர் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதற்கு சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் அதற்கான பணி நியமனம் செய்யாததும், அம்மா கிளினிக் என்ற பெயரில் சரியாக மருத்துவர்களை நியமனம் செய்யாமல் பெயர் அளவில் கிளினிக்குகளை திறந்துவைத்து வேஷம் போட்டதுமே காரணம்’ என்றுகுற்றஞ்சாட்டியவர், ‘குறை கூறுவதற்கு நேரம் இது அல்ல. எதிர்க்கட்சியினர் குறை கூறுவதை விட்டுவிட்டு ஆலோசனையை தெரிவித்தால் நல்லது’ என்றார்.













