இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 297 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலையில் காணப்பட்டது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் ஆட்டத்தின் 72 வது ஓவர் முடிவில் கேப்டன் கோலி, ரகானே இருவரும் இணைந்து அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இறுதியில் இந்திய அணி தரப்பில் கோலி 51 ரன்களுடனும், ரகானே 5 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலையில் உள்ளது.