திருமங்கலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள்
திருட்டு, நடந்து செல்பவர்களிடம் மொபைல் போன் பறிப்பு போன்றவை நடந்து வந்தன..
திருமங்கலம் நகர் காவல் நிலைய எஸ்.ஐ. கோபி தலைமையில் போலீசார், கீழ உரப்பனூர் வாகைகுளம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நம்பர் பிளேட் இல்லாத டூவீலரை டோப் செய்து ஓட்டி வந்த மேல உரப்பனூர் முருகன் மகன் சுந்தரபாண்டியன் 26, ரவி மகன் சிவ சூர்யா 22 , கீழ உரப்பனூர் இந்திரா காலனி தவமணி மகன் பிரதீப் 23, ஆகியோரிடம் விசாரணை செய்தபோது, நம்பர் பிளேட் இல்லாத வாகனத்திற்கு உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் இருந்தது. காவல்துறையிடம் தப்பிக்க முயன்றனர்.
அப்பொழுது, போலீசார் அவர்களைத் துரத்திப் பிடித்தனர். பின் அந்த வாகனத்தின் இன்ஜின் என்னை சோதனை செய்தபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன சௌடார் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான டூவீலர் என்பது தெரிந்தது. மூன்று பேரிடம் மேலும், விசாரணை நடத்திய போது அவர்களிடமிருந்து மூன்று டூவீலர்கள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.