‘குமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர். இந்த கனிமவள கடத்தலால் குமரி மாவட்ட இயற்கை வளத்தோடு விவசாயம் குடிநீர் ஆதாரம் உட்பட அனைத்தும் அழிந்து விடும் சூழ்நிலை உள்ளது. இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நாம் தமிழர் கட்சியினரும் எதிர்த்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் கனிமக் கொள்ளையை கடுமையாக எதிர்த்த தற்போதைய அமைச்சர் மனோ தங்கராஜ் இடையில் ஒரு நாள் களத்தில் இறங்கி லாரிகளை ஓரம் கட்டினார். ஆனால் அதன் பின்னும் கனிமக் கடத்தல் நிற்கவில்லை. தொடர்ந்து வெகு ஜோராக நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இரவு அணிவகுத்து வந்த கனிமக் கடத்தல் லாரிகளை பொதுமக்கள் தன்னிச்சையாக இறங்கி தடுத்து நிறுத்தினர். லாரிகளை திரும்ப இயக்காதவாறு சாவிகளை கைப்பற்ற முனைந்தனர். ஆனால் கனிமக் கடத்தல் லாரி டிரைவர்கள் குண்டர்களாக மாறி லுங்கி மடித்துக் கொண்டு பொது மக்களை தாக்க ஆயத்தமாகினர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் இருதரப்பாரையும் சமாதானப்படுத்தினர்.