கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர், ‘நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளேன்.
கோவையில் மக்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான். மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்படுகிறது. அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை.
அரசியலில் பெண்களை முன்னிறுத்துவது உலகத்தின் கடமை.என்னை வெற்றிக்கு அருகில் கொண்டுசென்ற மக்களுக்கு நன்றி.
கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை இல்லை. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும்
ஈஸ்ட் இண்டியன் கம்பனி போல, வடக்கில் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது.
மேகதாது விஷயத்தில் அரசியல் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன.
கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது.இன்னும் போதாது.
தோல்வியை சினிமாவிலும் கற்றிருக்கிறேன். கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்கள். இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்பது எங்கள் பணி.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல’ என்றார்.














