தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 10 பேர் கைது செய்தனர் , அவர்களிடம் இருந்து 500 மதுபுட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக வருகிற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மதுக் கடைகளும் முழுமையாக அடைக்கப் படுவதால், தென்காசி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தென்காசி, கொடிக்குறிச்சி , சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை, குற்றாலம், ஆயிரப்பேரி, பாட்டாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேரை கைது செய்தனர்.









