தமிழ்நாட்டில் நாளை மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதற்கான அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்று திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை கவனிக்கவுள்ளார்.
மற்ற அமைச்சர்கள் விவரம்:
துரைமுருகன் – நீர்வளத்துறை
கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித் துறை
ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை
க.பொன்முடி – உயர்கல்வித்துறை
எ.வ.வேலு – பொதுப்பணித்துறை
எம்.ஆர்.பன்னீர்செல்வம் – வேளாண்மை உழவர் நலத்துறை
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தங்கம் தென்னரசு – தொழில்துறை
எஸ்.ரகுபதி – சட்டத்துறை
முத்துசாமி – வீட்டு வசதித்துறை
கே.ஆர்.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை
தா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை
மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை
பி.கீதா ஜீவன் – சமூக நலன், – மகளிர் உரிமைத்துறை
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை
கா.ராமச்சந்திரன் – வனத்துறை
சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை
மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை
எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பி.கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை
பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
சா.மு.நாசர் – பால்வளத்துறை
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை
சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை
சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை
த.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை
மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
என்.கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை
2006ல் கருணாநிதி தலைமையில் அமைச்சர்களாக இருந்த 17பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 17 பேர் புதிய அமைச்சர்களாக உள்ளனர்.












