10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு

0
899

வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும். தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். 10ஆம்தேதி முதல் மளிகை, காய்கறி, இறைச்சி, பால் கடைகள் மட்டும் 12 மணி வரை திறந்திருக்கும். முடி திருத்தும் நிலையம்,அழகு நிலையம் செயல்படாது.

12 மணி வரை செயல்படும் தேநீர் கடைகளில் பார்சல் வாங்கலாம். பேருந்து, கார், வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை உள்ளது. அரசு நிறுவனங்களில் அத்தியாவசிய அலுவலகங்கள் மட்டும் இயங்கும். மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி, மகளிர் நலன் சார்ந்த அமைப்புகள் மட்டுமே இயங்கும்.

விதை, பூச்சிக்கொல்லி , மாட்டு தீவனக் கடைகளை பகல் 12 மணி வரை திறக்கலாம். அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும். சாலையோர உணவகங்களை திறக்க கூடாது. காய்கறி, பூ விற்கும் நடைபாதை கடைகளை 12 மணி வரை திறக்கலாம்.

வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} ஊழியர்களோடு இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் தினசரி பூசெய் நடத்தலாம். ஆனால், திருவிழா, கொடை, குடமுழுக்கு நடத்தக் கூடாது.

திருமணம், இறப்பு, வேலை வாய்ப்பு,மருத்துவத்துக்கு செல்வதற்கு உரிய ஆவணங்களுடன் அனுமதி அளிக்கப்படும். வெளிநாட்டு, வெளிமாநில ரயில், விமான பயணிகளுக்கு இ பாஸ் முறை அமலாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here