.தமிழக அரசு சார்பில் வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கு, ஆண்டுதோறும் ஆக.,15ல், கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .
இயற்கை இன்னல்கள், விபத்துகள், தீ விபத்து, திருட்டு சம்பவங்கள், நீரில் மூழ்கும் நிகழ்வுகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது துணிவுடனும், சாதுர்யமாகவும் செயல்பட்டு உயிர்களை காத்த ஆற்றல் மிக்க, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்கள், இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.
இதற்கு, https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும், 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












