சாத்தான்குளம் அருகே சோலார் திட்டத்துக்காக பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ் விசாரணை

0
1021

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும் சாலையோரம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமாக பனை மரங்களை சிலர் சோலார் திட்டத்துக்காக வெட்டினர் பனை மரங்களை வெட்ட அரசு தடை விதித்துள்ள நிலையில் அவற்றை வெட்டக்கூடாது என்று பனைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்குள்ளவர்கள் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி ஆய்வாளர்கள் எபினேசர், ஐசக் மகாராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 24 பனை மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் மேலும் வெட்டாதவாறு தடுத்தனர்.

அனுமதி இல்லாமல் பனை மரங்கள் வெட்டப்பட்டு இருக்குமாயின் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here