தேர்தல் நெருங்கும் வேளையில் பண பட்டுவாடா, அன்பளிப்பு உள்ளிட்ட பல வகை சேவைகளையும் வாக்காளர்களுக்கு வழங்க அரசியல் கட்சியினர் துடிக்கின்றனர். திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பண விநியோகம் செய்த காணொளி சமீபத்தில் வெளீயானது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னரில் 2,380 பிரஷர் குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை கைப்பற்றினர். வியாபாரத்துக்கு கொண்டு சென்றதாக ஈரோட்டை சேர்ந்த ஓட்டுநர் கூறினாலும், அவரிடம் அதற்கான ஆவணம் இல்லை என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.