கறி விருந்தில் தகராறு: நெல்லை வாலிபர் கோவையில் அடித்து கொலை

0
396


ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( 30),கூலி தொழிலாளி. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விஜயநாராயணம். ஒண்டிப்புதூரில் தோட்டம் வைத்திருப்பவர் செந்தில் (30)இவர்கள் இருவரும் அடிக்கடி தோட்டத்திற்கு சென்று மது அருந்துவது வழக்கம்.

இந் நிலையில் செந்திலின் தம்பி ரகுராமன் என்பவருடைய நண்பர்கள் அனிஷ் குமார் ,அஜித்குமார் சத்தியநாராயணா, ஆண்டனி ஆகியோர் அந்த தோட்டத்திற்குச் சென்று மது அருந்தி, கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு சென்ற மணி இங்கு எவ்வாறு மது அருந்த வரலாம்? என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். .

இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்்குமார் உள்ளிட்ட நண்பர்கள் மணியை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here