போடியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் ஆதரவாளரான தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் குறிஞ்சி மணி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவரது வீடு ஓபிஎஸ் அலுவலகம் அருகே உள்ளது.
அதேபோல், திருமயம் திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளரும் வி. கோட்டையூர் ஊராட்சி தலைவருமான ராம திலகம் மங்கலராமன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.