தனது தபால் வாக்கில் குறிப்பிட்ட சின்னத்துக்கு முத்திரையிட்டு அதைப் புகைப்படமெடுத்து முகநூலில் வெளியிட்டதாகத் தென்காசி மாவட்டம், சுரண்டை R.C நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் நேற்று முன் தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், அவர் தனது தபால் வாக்குச்சீட்டையே பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. சங்கரன்கோயிலில் நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தனது உடல்நிலை காரணமாக தனது தபால் வாக்குக் கவரை வாங்காமலே சென்றுவிட்டார்.
அவரது வாக்கை கையொப்பம் பெறாமலே யாருக்கோ விற்றுள்ளனர். வாக்கு சீட்டை வாங்கியவர் அதில் முத்திரை குத்தி தேங்காய் வியாபாரி ஒருவரின் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
🔥அதைப் பார்த்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி, மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க, வாக்குச் சீட்டில் இருந்த வரிசை எண்ணை வைத்து முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர்.
🔥
இதையடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளை களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட ஆசிரியை தபால் வாக்கே பெறவில்லை என்பதை உறுதிசெய்தது. தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சியின் போது பொறுப்பில் இருந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
🔥
🛡 தபால் வாக்கை முகநூலில் வெளியிட்ட தேங்காய் வியாபாரியை தூக்கிய போலீசார், குற்றவாளியையும் நெருங்கிவிட்டதாக தெரிவித்தனர். ஆசிரியைக்கு உரிய வாக்குச்சீட்டை அனுப்பி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதியளித்ததாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் கூறினார்.
🔥
🛡முதியோர் வாக்கு, தபால் வாக்குகளுக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய விலை இருப்பதல இதுபோல் வேறெங்கும் விற்பனை நடந்துள்ளதா என ஆராயவேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.















