மருத்துவம் வணிகமாகிவிட்ட இக்காலகட்டத்தில் மருத்துவருக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் மோதல் நடப்பது சகஜமாகி வருகிறது. இதனால் தங்களுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டுமென மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு மருத்துவர் பாதுகாப்புக்கென புதிய வரைவு மசோதா தயாரித்துள்ளது. அதன்படி, சுகாதார அலுவலர், பணியாளர், மருத்துவர்களை தாக்கினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.