சென்னை முகப்பேர் வளையாபதி சாலையில் உள்ள லஷ்மி ஜூவல்லரியின் ஊழியரான கைலாஷ்
கடந்த 26 ஆம் தேதி 3 மணி அளவில் என்பவர் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு 3 சவரன் எடை கொண்ட ஆறு நகைகளை காண்பித்து வைக்கிறார்.அதில் ஒன்றை தேர்வு செய்த அந்தப் பெண்மணி ஏடிஎம் இருந்து பணம் எடுத்து வருவதாக சென்றுவிடும் நேரத்தில் ஆறு செயினில் ஒரு செயினை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்.

இது தொடர்பாக கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தாட்சாயினி வயது 47 என்கிற பெண் ஒருவர் மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு செல்கிறார்.
இது தொடர்பாக ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த பின் சிசிடிவி ஆய்வு செய்த போலீசார் தாட்சாயினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இவரது கணவர் சந்திரகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.

தாட்சாயினி மீது ஏற்கனவே ஆவடி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, பூக்கடை காவல் நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு
.