கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளில் நீர் புகுந்துள்ளது.
இதில் மாசிலாமணிபுரம் 2ஆவது தெரு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை நீர் தேங்கி குட்டையாக காட்சியளித்தது. பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனின்றி வேதனையடைந்தனர்.
இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமையில் மீன்பிடிக்கும், துணி துவைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, மாநகர் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், காஸ்ட்ரோ,வாலிபர் சங்கம் சார்பில்,பாலா,ஜேம்ஸ்,மனோஜ்,அருண்,வேணு,முருகன்,மணி,பாலா,சிஐடியூ சார்பில் ஏ.எம். முருகன்,வையனப்பெருமாள்,பெருமாள்,மணவாளன்,பொதுமக்கள் ஹலாய்,ராஜகோபால்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









