சிக்னலுக்காக நின்ற ரயிலில் இருந்தவரிடம் நகை பறிப்பு

0
795

மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் மதுரை ரயில்வே நிலையம் அருகே சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் ரயில்வே தண்டாவளத்தின் வழியாக வந்து ரயிலில் ஏறி, அதில் அமர்ந்திருந்த பயணியிடம் தங்கசெயின் மற்றும் கைபேசியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.


விசாரணையில், நகை, செல்போனை பறிகொடுத்தவர் திண்டுக்கல் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் டேவிட் ராஜா என்பது தெரியவந்தது. வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியவர்களை பற்றி ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here