துடியலூர் அடுத்த எஸ். எம். பாளையம் சங்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 36) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .நேற்று இவர் கவுண்டம்பாளையம்- நல்லாம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு சென்றனர்.
இதுகுறித்து செந்தில்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நல்லாம் பாளையத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் ( 32)வெள்ளியங்கிரி ( 27) இடையர்பாளையம் குமரகுரு ( 28) சின்னவேடம்பட்டி தமிழ்ச்செல்வன் (29) ஆகியோரை நேற்று கைது செய்தனர் .இவர்கள் 4 பேரும்பழைய குற்றவாளிகள் ஆவார்கள். இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












