மதுரை அருகே லாரியில் கடத்திய 46 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

0
1164


மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் சக்கிமங்கலம் ரைஸ் மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் தீவிர ரோந்து பணி செய்து வாகன சோதனையில் ஈடுபடும்போது, சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற அருண்பாண்டி (31) முத்துப்பாண்டி(35) ஆகியோரை கைது செய்து செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 46 டன் ரேஷன் அரிசி, கடத்த பயன்பட்ட

லாரி, ஆட் டோ, பைக் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன . அவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு குழுவிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here