அமைச்சர் காரை சோதனையிட்டால் தண்டனையா? தேர்தல் அலுவலர்கள் பீதி

0
1013

கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் கட்சி நிர்வாகிகள் காரை தேர்தல் அலுவலர் மாரிமுத்து தலைமையிலான பறக்கும்படையினர் சோதனையிட்டனர்.
முன்னதாக, கடந்த வாரம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் காரில் சென்றபோதும் இதே பறக்கும்படையினர் சோதனை நடத்தியதால் ஆத்திரமடைந்த ராஜூ ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர்.
அமைச்சர் மீது அதிகாரி நாலாட்டின்புதூர் போலீசில் புகார் கொடுக்க, புகார் கொடுத்தவருக்கே தண்டனையாக விளாத்திக்குளம் தொகுதிக்கு மாற்றினர். பலத்த எதிர்ப்பு எழுந்ததால் மீண்டும் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனாலும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. நிலை ஒன்று அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், எங்கள் நிலை என்னவாகுமோ? என்று பிற அலுவலர்கள் பீதியில் உள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here