நாடகம் என்ற கலையே மங்கி மறைந்து விட்ட இந்த காலகட்டத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கலா மன்றங்கள் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
அவற்றுள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள தமிழறிவு மன்றம் சுமார் முக்கால் நூற்றாண்டு காலம் பழமையானது. தொடர்ந்து அந்தப் பகுதி கோவில் கொடை விழாக்களில் நாடகங்கள் நடத்தி வருகிறது.
அம்மன்றத்தின் 72ஆவது ஆண்டு தொடக்க விழா , சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் விரைவில் நடைபெற உள்ள நாடகத்துக்கு பூஜை போட்டு ஒத்திகை தொடங்கப்பட்டது. இதில் மன்ற நிர்வாகிகள், நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.