நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மிதந்த கேனில் இருந்த சாராயத்தை படகில் மீன் பிடித்து திரும்பிய மீனவர்கள் சிலர் எடுத்துக் குடித்தனர்.
இதில், தங்கச்சிமடம் அந்தோணி (38) இன்று காலையில் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரோக்ய புரோஸிஸ் (40) முற்பகலில் உயிரிழந்தார்.














