கிறிஸ்தவ சபைகளில் புதுமையான சபை தூத்துக்குடி மாவட்டம் மூக்குப் பீறியில் உள்ளது அதுதான், ‘நாட்டு சபை’ என்றும்,’ இந்துகளின் ஏக இரட்சகர் சபை ‘ என்றும் அழைக்கப்பட்ட ‘ இந்திய ஏக இரட்சகர் சபை ‘.
மற்ற ஆலயங்களை போல மணி அடித்து ஆராதனை செய்ய மாட்டார்கள். கொம்பு ஊதி அழைப்பு விடுப்பார்கள். பழைய ஏற்பாட்டு சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பார்கள். புளிப்பு இல்லாத அப்பம் உண்ணும் ‘பாஸ்கா பண்டிகை’, ‘கூடாரப் பண்டிகை’ என்று இவர்கள் கடைப்பிடிக்கும் விழா முறை பிற கிறிஸ்தவ சபைகளில் இல்லாதவை.
ஆலயத்திற்குள் நுழையும் போது காலை கழுவி விட்டு தான் நுழைய வேண்டும். ஆராதனையில் 10 கட்டளைகளை வாசிக்க வேண்டும். இறப்பு வீட்டுக்கு சென்றால் ஏழு நாட்கள், குழந்தை பெற்றால் 40 நாட்கள் ஆலயத்துக்கு வரக்கூடாது.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை இவர்கள்’ நாள் கதிர் அசைவாடுதல்’ என்று கொண்டாடுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை செவன்ட் டே அட்வென்டிஸ்ட்கள் போல, சனிக்கிழமை தான் ஓய்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
பிரதிஷ்டை நாட்களில் இந்து கோயில்களில் போல், பாடலுக்கு தவில் இசை வாசிக்கப்படுகிறது. ஆனால் நாதஸ்வரத்துக்கு பதிலாக கிளாரிநட் இசைக்கிறார்கள்.
இத்தகைய வித்தியாசமான நடைமுறைகளைக் கொண்ட நாட்டு சபை என்னும் நாடார் சபையை ( நாடார்கள் இந்த சபையில் இருப்பார்கள் ) அருமை நாயகம் சட்டாம்பிள்ளை. கொற்கையை சேர்ந்த இவர் தன்னை அங்குள்ள அரச வம்சத்தின் தொடர்ச்சியாக கூறியுள்ளார்.
நாடார்கள் பனைத் தொழில் செய்து மோசமான நிலையில் வாழ்ந்தவர்கள் என்ற கால்டுவெல் போற்று இவருக்கு பெரிய வேதனையை தந்துள்ளது. அதுமட்டுமின்றி தென்னிந்திய திருச்சபையின் சில நடைமுறைகள் இவருக்கு பிடிக்கவில்லை. எனவே 1857ல் மூக்குப்பீறியில் நாட்டு சபை என்னும் நாடார் சபையை தொடங்கினார். இப்போது இந்த சபைக்கு ஏழு கிளைகள் உள்ளன.
வித்தியாசமான நடைமுறைகளைக் கொண்ட இந்த சபையின் பிரதிஷ்டை சமீபத்தில் நடந்தது. அப்போது அங்கு வந்த ஆயிரக்கணக்கானோருக்கு அரிசி படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி, மக்கள் வரிசையாக நின்று கால் படி அரிசியும் 50 ரூபாயும் பெற்று சென்றனர்.
மேள,தாள இசை, சிறப்பு ஆராதனை களை கட்டியது.