கோவில்பட்டி சிறுவன் கொலையில் விசாரணை மந்தமாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுவரை சிறுவன் வசித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் 30 ஆண்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது பேர் தீவிர விசாரணையில் உள்ளனர்.
அப்பகுதியில் நடக்கும் கஞ்சா சாராயம் வியாபாரத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படும் நிலையில், சிறுவன் அணிந்திருந்த நகைக்காக கொலை நடந்திருக்கலாமோ என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடக்கிறது.
தற்போதைய நிலையில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் மீது சந்தேகம் இறுகுகிறது அவர்களை போலீசார் தனியாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.









