சென்னையில் மனைவியை வெட்டிவிட்டு தப்பிய கணவன் சொந்த ஊரில் மர்ம மரணம்

0
1108

சென்னை ஆழ்வார்பேட்டை சு.வி ராமன் சாலையைச் செந்தவர் முனுசாமி (70). இவருக்கு மல்லிகா (65) என்ற மனைவியும், தீர்த்தமலை, கலைச்செல்வி, கலைவாணி மற்றும் தீபா என்ற 4 பிள்ளைகளும் உள்ளனர். முனுசாமி தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். மகள்களுக்கு திருமணமான நிலையில் முனுசாமி தனது மனைவியுடன் மகன் தீர்த்தமலையின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் தீர்த்தமலை சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரி கலைச்செல்வியை அழைத்து வரச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு மாலை திரும்பிவந்து பார்த்தபோது அவரின் தாயான மல்லிகா வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீர்த்தமலை அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு பலத்த காயங்களுடன் கிடந்த தாய் மல்லிகாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

பின்னர் சிகிச்சையில் இருந்த தாய் மல்லிகாவிடம் மகன் தீர்த்தமலை நடந்தது குறித்து விசாரித்தபோது தந்தை முனுசாமிதான் மது போதையில் சந்தேகப்பட்டு தன்னை வெட்டிவிட்டு ஓடி விட்டதாக தெரிவித்துள்ளார். தீர்த்தமலை அளித்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த அபிராமபுரம் போலீசாரிடம் இச்சம்பவம் தொடர்பாக தீர்த்தமலை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முனுசாமியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் முனுசாமி தனது சொந்த ஊரான திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தை அடுத்த குரலூர் கிராமத்திற்கு தப்பியோடியதாக கூறப்பட்ட நிலையில், அவர் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள முனுசாமியின் வீட்டின் திண்ணையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அங்குள்ள அக்கம்பக்கத்தினர் சென்னையிலுள்ள மகன் தீர்த்தமலைக்கு தகவலிக்க அவர் மூலம் அபிராமபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனைவியை வெட்டிவிட்டு தப்பியோடிய கணவன் சொந்த ஊரில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியடிய கணவன் அவரின் சொந்த ஊரில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here