தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று சிறப்பு ரத்ததான முகாம் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்றது.இந்த முகாமில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ரத்ததானம் செய்தனர். இதில் மொத்தம் 108 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கிரிஸ்டோபர் செய்திருந்தார்.





