புளியங்குடியில் நள்ளிரவில் வீடு புகுந்து நகை திருட்டு 

0
855

 

புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் காளையாப்பாண்டியன்(35) நேற்று இரவு வீட்டைப்பூட்டி விட்டு மற்றொரு வீட்
டில் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வீடுபுகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இன்றுகாலையில் காளைப்பாண்டியன் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை திருடு போனது
தெரியவந்தது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி இன்ஸ் பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மநபரைத் தேடிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here