தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் அழகிய தேரி மணல் குன்றுகளைக் கொண்ட ஊர். அதன் அருகே தன்னூத்து என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆலமரம் ஒன்று அகன்று படர்ந்து வளர்ந்துள்ளது.
இந்தப் பகுதி மக்கள் இளைப்பாறுவதற்காக இந்த பகுதியிலே வந்து தங்கி சாப்பிட்டு செல்வார்கள்.அது போல் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் பார்க்கின்றவர்களும் இங்கே வந்து கூடி மகிழ்ந்து செல்வார்கள்.

இந்த பகுதியிலே செம்மண் தேரி அதிகமாய் இருப்பதால் கிணறுகளிலே ஊற்றுப் பெருக்கெடுத்து கிணறு நிரம்பி வழிந்து ஓடும் ஆகவே தன் இயல்பாக பெருகும் ஊற்று என்பதால் தன்னூற்று என அழைக்கப்பட்டது.
இந்த பகுதி மக்கள் இந்த பகுதியிலே வந்து ஆலமரத்தை சுற்றி பார்த்து, அதன் நிழலிலேயே அமர்ந்து குடும்பத்துடன் காணும் பொங்கல் குதூகலிப்பார்கள். பொங்கல் கொண்டாட்டக்காரர்களை எதிர்பார்த்து சிறப்பு தன்னூற்று பெரிய ஆலமரம் காத்திருக்கிறது.








