தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று ஆய்வு செய்தார். இதில் காவல்துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








