தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்று அரசாணை உள்ளது. நீதிமன்ற உத்தரவும் உள்ளது. ஆனால் அவ்வப்போது அரசு வேலைகளுக்கு இங்கிருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது நடைபெறுகிறது.
குறிப்பாக, ஆற்றுப் பால வேலை, கூட்டுக் குடிநீர் திட்ட வேலைகளுக்கு ஆற்றிலேயே மணல் திருடப்படுகிறது. இது சட்ட விரோதமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையுடன் நடைபெறுகிறது.
தற்போது சேரன்மாதேவி பகுதி தாமிரபரணி ஆற்றில் மூன்று கூட்டு குடிநீர் திட்ட உறைகிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆற்றிலே தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆற்றிலேயே மணலும் அள்ளப்படுகிறது.

இந்த சட்ட விரோத வேலையை செய்த ஒப்பந்ததாரர் , அவருக்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மணல் விலையை அபராதத்துடன் அவர்களிடமிருந்து வசூலிக்குமாறும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.








