ஆயூத பூஜையன்று தங்கள் தொழில் கருவிகளை தூய்மைப்படுத்தி பூஜை செய்து வருகின்றனர். சமீப காலமாக அன்றைய தினம் திருஷ்டி சுற்றி பூசணி உடைப்பது அதிகரித்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயப்பட நேரிடுகிறது.
எனவே, ஆயுத பூஜையன்று பூசணிக்காய் உடைக்கவேண்டாம் என்று சேலம் மாநகர ஆணையர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.













