மனு வாங்க மேயர் மறுத்ததால் கல் தூணிடம் மனு அளித்த பாஜகவினர்

0
429

மதுரை மாநகராட்சியில் முன்னாள் மேயர் முத்து சிலை வைக்க கோரி பாஜக நகர் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மனு அளிக்க மேயர் அறை முன்பாக காத்திருந்தனர். ஆனால் அவர்களை மேயர் இந்திராணி சந்திக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் மாநகராட்சி முன்பாக இருந்த கல்வெட்டு தூணுக்கு சால்வை அணிவித்து மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர்.

அதன்பின்ப சரவணன் அளித்த பேட்டியில், மதுரை மாநகராட்சி திமுக குண்டர்கள் வசம் சிக்கி உள்ளது.. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக செயல்படுகிறது.. திமுக குண்டர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கபடுகின்றனர்.. மதுரை மேயரை இயக்குவது யார் என்று தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here