சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் உறவினரான வில்சன் ராஜா என்பவருக்கு நாளை சாத்தான்குளத்தில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து இ பாஸ் பெற்றுக்கொண்டு நீ பார்த்துக் கொண்டு மணமகனும் வீட்டாரும் சாத்தான் குளத்திற்கு வந்தனர்.
வழியில் அவர்களை கோவில்பட்டி செக்போஸ்டில் தடுத்த போலீசார் அங்கேயே இரு நாட்கள் இருக்க வேண்டும் அதன்பின்னரே செல்ல அனுமதிப்போம் என்று கூறினர் இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அதிகாரிகளிடம் பேசினர் அவர்களும் தாசில்தார் சொன்னால் விடுவதாக கூறினார் இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாரிடம் கூறியும் தன்னால் முடியாது என்று கை விரித்து விட்டார் மறுநாள் திருமணம் என்ற நிலையில் மாப்பிள்ளை வீட்டார் சுமார் மூன்று மணி நேரம் கோவில்பட்டி போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். இதுகுறித்து ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துரி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றனர் சென்றனர் இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர் காரணமின்றி செக்போஸ்டில் நிறுத்திய போலீசார் மற்றும் கோரிக்கையை பரிசீலிக்காத தாசில்தார் மீது மணமக்கள் வீட்டாரும் உறவினர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு டோஸ் விட்ட கலெக்டர், அவர்களையும், தாசில்தாரையும் விசாரிப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தார்.