மேட்டுப்பாளையம் கோத்தகிரி ஈரோடு ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கிட்டான் .இவரது மகள் அர்ச்சனா (23) .இவருக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது ஜாதகத்தை பார்த்த பொழுது செவ்வாய் தோஷம் இருப்பது தெரிய வந்தது. இதனால் திருமண தாமதம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அர்ச்சனா கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்
.இந்நிலையில் நேற்று அவரது சகோதரர் ஆனந்தராஜ் அர்ச்சனாவை மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வேலைக்கு செல்வதற்காக இறக்கி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதிய உணவிற்காக ஆனந்தராஜ் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் அர்ச்சனா பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பஅளித்த புகாரின்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













