நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள புதுப்புடியில் டாஸ்மாக் கடை ஒன்று கோயில் முன்பு அமைக்கப்பட்டதாக கூறி புது குறிச்சி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் மூன்றடைப்பு போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதை எடுத்து அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது








