தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பங்கு தந்தையாக உள்ளவர் பாக்ய ஜோசப்ராஜ். இவரது தம்பி இருதயராஜ். தான் வாங்கிய புதிய காரை தனது அண்ணன் பங்கு தந்தையிடம் காண்பித்து அர்ச்சிப்பதற்காக வந்தார்.
காரை பங்குத்தந்தை பங்களா முன்பு நிறுத்திவிட்டு பங்குத் தந்தையை சந்திக்க சென்ற போது, புத்தம் புதிய ஒரு வாரமே ஆன புதிய காரினுடைய அனைத்து கண்ணாடிகளையும் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இருதயராஜ் அளித்த புகாரின் பேரில் கருங்கடலைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சார்லஸ் ராஜா ,மோசஸ் மகன் சாத்ராக், ரெக்ஸ் மகன் காட்வின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலய வளாகத்திற்குள் செல்போன் பேசக்கூடாது என்று கண்டித்ததால் பழிவாங்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
.